Search

சாத்தானும் சிறுமியும் / Saaththaanum Sirumiyum

40.00

ISBN : 9788123428062
Author : Yuma. Vasuki
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2012
Code no : A3152
Page: 48

Qty
Compare

In Stock

யூமா வாசுகி

கவிஞர். நாவல் – சிறுகதைப் படைப்பாளி. ஓவியர். கலை நம்பிக்கையும் அர்ப்பண உணர்வுமிக்க சிறுபத்திரிகையாளர். படைப்பெழுச்சியில் கடரும் மொழி இவருடையது. இவரது கவித்துவம் தனிப்பட்டது. மென் உணர்வுகளின் மேன்மையில் பொலிவு பெறும் கவிதைகள். வாழ்வின் மெய்ம்மையை வசப்படுத்தும் கவிஞன். தனித்துவமான காட்சிப் படிமங்கள். உருவகங்கள், குறியீடுகள் மூலம் இவர் நிகழ்த்தி வரும் பங்களிப்புகள் ஒரு மெய்யான கலாசார வாழ்வுக்கு வித்திடுபவை. தமிழின் பெருமதிகளில் ஒருவர்.
மணிவண்ணன்

இளம் ஓவியர்களில் ஒரு வலுவான சக்தி, இலக்கியப் படைப்புகளுக்கான ஓவியங்களை உருவாக்குவதில் அபாரமான கலைஞானம் கொண்டவர். ஒரு இலக்கியப் படைப்பை எதிர்கொள்ளும் இவரது படைப்பு மனம் அதனுடன் கொள்ளும் உறவில் தனதான ஒரு படைப்புலகை உருவாக்குகிறது. அது. இலக்கியப் படைப்புடன் இசைமை கொண்டிருக்கும் அதே சமயம் தனித்துவமான ஒரு ஓவியப் படைப்பாகவும் எழுச்சி பெறுகிறது. இத் தொகுப்பில் அமைந்துள்ள இவரது ஓவியங்களும் முகப்போவியமும் இதன் அழுத்தமான சாட்சிகள்.
ஓர் அழகிய உறவில் கவிதையும் ஓவியமும் இசைபட வாழும் ஒரு சிறந்த தொகுப்பு இது.

-சி.மோகன்

Back to Top