Search

book fair
எமது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் நாகர்கோவில் கிளையின் சார்பாக 36 ஆவது தேசிய புத்தக கண்காட்சிமார்த்தாண்டத்தில் இனிதே துவங்கியது கண்காட்சியை குளச்சல் சட்டமன்ற தொகுதி MLA J.G. பிரின்ஸ் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார் கண்காட்சி துவக்க விழாவில் வரலாற்றறிஞர் அ.கா.பெருமாள், எழுத்தாளர் குறும்பனை சி.பெர்லின், ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியின் இயக்குநர் தோழர் S.K கங்கா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
எமது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் புதிய வெளியீடான திரு இரா.செல்வம் ஐ.ஏ.எஸ் அவர்களின் பனையடி நாவல் புதிய நூல் வெளியீட்டு விழா இனிதே நிறைவுற்றது விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றியும் பேரன்பும்
37வது புத்தக கண்காட்சி திருநகர் பகுதியில் சிறப்பான முறையில் துவக்கி உள்ளது.சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.ப.மாணிக்கம் தாகூர். MA.,BL., அவர்கள் வருகை தந்து புத்தக கண்காட்சியை துவங்கி வைத்தது உள்ளார்..
உலக புத்தக தினத்தை முன்னிட்டு எமது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மூன்று புதிய நூல்கள் வெளியீட்டு விழா கன்னியாகுமரி புத்தக கண்காட்சி கலை அரங்கத்தில் நேற்றைய தினம் இனிதே நடைபெற்றது.புதிய நூல்களை திரு. எஸ்.ஆஸ்டின் Ex.M.P அவர்கள் வெளியிட திரு. சிதம்பர மார்த்தாண்டம் செயற்பொறியாளர், சிறுதுறைமுகங்கள் , அருட்பணி. A.ஸ்டீபன் பங்குத்தந்தை, குறும்பனை மற்றும் முனைவர் ௮.மலர்விழி இணைப்பேராசிரியர்,திருத்தங்கல் நாடார் கல்லூரி,சென்னை. ஆகியோர் பெற்றுக்கொண்டு சிறப்பித்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (15.6.2022) தலைமைச் செயலகத்தில், திரு. பூர்ணலிங்கம், இ.ஆ.ப., (ஓய்வு) அவர்கள் சந்தித்து, தான் எழுதிய “வாழ்வில் வளம்பெற வள்ளுவம்” என்ற நூலினை வழங்கினார். உடன் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. சண்முகம் சரவணன், பொது மேலாளர் திரு. ரத்தினசபாபதி ஆகியோர் உள்ளனர்.
தமிழக அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் 2016ஆம் ஆண்டின் சிறந்த நூல்களுக்கான விருது பெற்ற நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடுகள்
07.08.2022 அன்று திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 25வது தமிழ் மாநில மாநாட்டில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 12 புதிய நூல்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் D.ராஜா Ex.MP அவர்கள் வெளியிட்டார்.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., வெளியிடும் தெய்வத்திரு ப.சங்கரன் IAS அவர்களின் வாழ்வில் சந்தித்ததும் சாதித்ததும் நூல் வெளியீட்டு விழா
46ஆவது சென்னை புத்தக கண்காட்சி 2023 நந்தனம் YMCA மைதானம் சிறப்பு விருந்தினராக தலைமைச் செயலாளர் டாக்டர் வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்
Back to Top