Search

இளைஞர்களுக்கான வாழ்க்கைத் திறன்கள் / Ilaignargalukkana Vazhkkai Thirangal

185.00

ISBN : 9788123441689
Author : P.R. Muthusamy
Weight : 100.00 gm
Ilaignargalukkana Vazhkkai Thirangal
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2021
Code no : A4521

Qty
Compare

In Stock

மனிதனின் மூளை ஒரு பெரிய இனிமேல் தோற்றுவிக்க முடியாத ஒரு கம்ப்யூட்டர், அதைச் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தால் செய்ய முடியாது என்பது எதுவுமில்லை. மூளைதான் மனிதனின் சக்தி. அந்த சக்தியைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். இப்போதைய இளைஞர்கள் எப்படி இருக்க வேண்டும். அவர்களுக்கு எவை எவை உபயோகமாக இருக்க வேண்டும் என்பதைப் பல விதத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

டாக்டர் நல்ல பழனிசாமி தலைவர், உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் & கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை

பக்கத்துக்குப் பக்கம் முத்துக்களை விதைத்தாற் போல் ஆளுமை வளர்க்கும் அறிவுக் களஞ்சியமாக இந்த நூலை வடித்துத் தந்திருக்கிறார் பேராசிரியர் முத்துசாமி. பேராசிரியர் தம் வாழ்வை இளைய சமூதாயத்துக்காக ஒப்படைத்துக் கொண்டவர். பல தலைமுறை மாணவர்களுக்கு குறியும் நெறியும் காட்டிய அனுபவம் மிக்கவர். எனவே உள்ளங்கை நெல்லிக்கனி போல மாணவர்களின் சிந்தனைப் போக்கை அளந்தறிந்தவர். தம் வாழ்வனுபவத்தின் பிழிவாக ‘இளைஞர்களுக்கான வாழ்க்கைத் திறன்கள் என்ற இந்த நூலைத் தந்திருக்கிறார்.

“எண்ணங்களை மாற்றியமைப்பதன் மூலம் நாம் நம் எதிர்காலத்தை மாற்றி அமைக்கலாம்”

இந்த மனம் கவர் வாசகத்தை மணிவாசகமாக இளைஞர்கள் நெஞ்சில் ஏந்துவார்களானால் வானமும் மண்ணும் அவர்கள் வசப்படும் என்று நான் உறுதியாக எண்ணுகிறேன். இந்த நூலை இளைஞர்களின் கைவாளாக நான் மதிக்கிறேன்.

சிற்பி பாலசுப்பிரமணியம்

Back to Top