Search

பசுவின் புனிதம் / Pasuvin Punitham

165.00

ISBN : 9788123440828
Author : D.N. Jha
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A4435

Qty
Compare

In Stock

டி.என்.ஜா என்று சுருக்கமாக அழைக்கப்படும் துவிசேந்திர நாராயண் ஜா அவர்கள் 1957 ஆம் ஆண்டு கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் இளங்கலைப்பட்டமும் பாட்னா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் (1959), முனைவர் பட்டமும் (1964) பெற்றார். 1975 வரை இதே பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பல பல்கலைக்கழகங்களிலும், கல்வி மையங்களிலும் உரையாற்றியிருக்கிறார். 1984-85இல் பல்கலைக்கழக மானியக் குழுவில் வரலாற்றுத் துறையில் தேசிய விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் தில்லி பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் எழுதியுள்ள நூல்கள் பின்வருமாறு: Revenue System in Post – Maurya and Gupta Times (கல்கத்தா, 1967) Andient India: An Introductory Outline தில்லி, 1977) Studies in Early Indian Economic History (தில்லி, 1980), Economy and Society in Early India: Issues and Paradigms (இல்லி, 1993) Ancient India in Historical Cutline (தில்லி, 1998). கடைசியாக அவர் எழுதிய Holy Cow (தில்லி, 2001) என்ற நூலுக்கு அய்தராபாத் நீதிமன்றம் தடை விதித்தது. இதே நூலை The Myth of the Holy Cow என்ற பெயரில் வெர்ஸோ (லண்டன் நியூயார்க்) பதிப்பகம் வெளியிட்டது.

புனிதப்பசு என்ற நூல் வெளியிடப்பட்டபோது இவருக்குக் கொலை மிரட்டல்கள் வந்தன. அந்தளவிற்கு வகுப்புவாதச் சக்திகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடியவர் இவர்.

Back to Top