Search

-14%

தொழில் முனைவோருக்கு ஏற்ற கால்நடைப் பண்ணைத் திட்டங்கள்

360.00

Book Title : தொழில் முனைவோருக்கு ஏற்ற கால்நடைப் பண்ணைத் திட்டங்கள் (Thozhil Munaivorukku Ettra Kaalnadaip Pannaith Thittangal)
Edition : 2
Category : Environment
ISBN : 9788123402406
Author : Dr.O. Henry Francis
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2023
Pages : 336
Code no : A701

Qty
Compare

In Stock

தொழில் முனைவோருக்கு ஏற்ற கால்நடைப் பண்ணைத் திட்டங்கள்

டாக்டர் ஒ.ஹென்றி ஃபிரான்சிஸ் அவர்கள் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறையில் 6 ஆண்டுகள் கால்நடை மருத்துவராகப் பணியாற்றியவர். பாரத ஸ்டேட் வங்கியில் 29 ஆண்டுகள் ஊரக வளர்ச்சிப் பிரிவில் பணியாற்றியுள்ளார். இதில் 8 ஆண்டுகள். ஐதராபாத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் (SBIRD) வங்கி அலுவலர்களுக்கு கால்நடை மற்றும் மீன்வளர்ப்புத் திட்டங்கள் பற்றிய பயிற்சியை வழங்கும் பயிற்றுநர் ஆசிரியராக (Faculty Member) சிறந்த முறையில் பணிபுரிந்துள்ளார்.இவர் இதுவரை சுயமாக 5 நூல்களைப் படைத்துள்ளார். இதில் தொழில் முனைவோருக்கு ஏற்ற கால்நடைப் பண்ணைத் திட்டங்கள் என்ற நூல் தமிழ்நாடு அரசால் 1994 ஆம் ஆண்டு சிறந்த நூலுக்கான பரிசு பெற்றது.

இவர் தொலைதூரக் கல்வி மூலம் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர் (M.A. POLITICAL SCIENCE) இவர் எழுதிய காகதிய பேரரசு- தெலுங்கான மன்னர்களின் வீர வரலாறு என்னும் வரலாற்று நூல் சிறப்பு வாய்ந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு இவர் எழுதிய “மீன் வளம் சார்ந்த தொழில்களில் சுய வேலை வாய்ப்புகள்” என்னும் நூல் வங்கி நிதி உதவி மற்றும் அரசு மானியத் திட்டங்களைத் தொகுத்து வழங்கிய முதல் தமிழ்நூல் என்று சொன்னால் மிகையாகாது. கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளம் குறித்த பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். கால்நடை வளர்ப்பு. மீன்வளம் மற்றும் கால்நடை பொருட்களை பதனிடம் செய்தல் போன்ற சுய தொழில்களில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். நேஷனல் புக் டிரஸ்ட் எனப்படும் ஒன்றிய அரசின் பதிப்புத்துறைக்காக 5 நூல்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்கவை. ‘நம்மைச்சுற்றி வாழும் பாம்புகள்’ மற்றும் ‘புலிகளுக்கும் கொம்பன் யானைகளுக்கும் நடுவில் எனலாம்.

Back to Top