Search

-10%

சவால் விடு சாதனை செய்

153.00

Edition : 2
Author : Ramaiah I.A.S
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Pages : 164
Publishing Year : 2023
Code No : T488

Qty
Compare

In Stock

சவால் விடு சாதனை செய்

ஆசிரியரைப் பற்றி…

முனைவர் இராமையா, ஐ.ஏ.எஸ். அவர்கள். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டத்திலுள்ள ஓட்டுடன்பட்டி என்னும் குக்கிராமத்தில் பிறந்தவர், இவர்தம் தந்தையார் செல்லையா-தாயார் செல்லம்மாள் ஆவர். இவர் 1974இல் தூத்துக்குடி, வ.உ.சி, கல்லூரியில் பொருளாதார இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, 1976இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1976 முதல் பாரத ரிசர்வ் வங்கியில் Probationary Officerஆகப் பணியாற்றி வந்த இவர், 1981இல் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று, தமிழ்நாட்டுப் பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். தஞ்சை மாவட்டத்தில் – மன்னார்குடி சப் கலெக்டராக, வேலூர் கூடுதல் மாவட்ட ஆட்சித் தலைவராக, சேலம் மாவட்ட ஆட்சித் தலைவராக, வேளாண்மைத் துறை இயக்குநராக, தொழிலாளர் துறை ஆணையராக, தமிழ் வளர்ச்சி, பண்பாடு மற்றும் அறநிலையத் துறையின் அரசுச் செயலாளராக, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநராக பணிகளில் முத்திரை பதித்தவர். தன்னுடைய மிகுந்த பணிகளுக்கிடையே பி.எல். படித்து முடித்ததோடு குழந்தைத் தொழிலாளர் சட்டங்களில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். தற்சமயம், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக பணியாற்றி வருகிறார். தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டுள்ளதோடு மட்டு மல்லாமல் இளைஞர்களை ஊக்குவிக்கும் முயற்சியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்

என்னும் வள்ளுவர் வாக்கு, இவரின் தாரக மந்திரம்.

Back to Top