Search

ஓற்றைக்கால் பறவை / Ottraikkaal Paravai

100.00

ISBN : 9788123405988
Author : Kamalavelan
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A1003

Qty
Compare

In Stock

நூலாசிரியர் மா.கமலவேலன் அவர்கள் படைத்த அகில இந்திய வானொலி நாடகங்கள் கடந்த 35 ஆண்டுகளாக நேயர்களின் சிந்தனைக்கு விருந்தாகிக் கொண்டிருக்கின்றன. அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

“இந்தியா 2020” நூலைச் சிறுவர்கள் எளிதில் படிக்கும் வண்ணம் உருவாக்கம் செய்து மூல நூலாசிரியர்களான குடியரசுத்தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் – விஞ்ஞானி ய.சு. ராஜன் இருவரின் பாராட்டைப் பெற்றவர். சிறு கதைகள், நாடகங்கள். வாழ்க்கை வரலாறு நூல்கள் பல எழுதியுள்ளார். நவீன இலக்கியத்தின் முன்னோடியான நினைவில் வாழும் வல்லிக்கண்ணன் இவர் கதைகளிள் பன்முக நலங்களைப் பாங்குடன் திறனாய்ந்து பாராட்டியுள்ளார்.
இவரது படைப்புகள் பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளில் பாடத்திட்ட நூல்களாக உள்ளன.

கோவை லில்லி தேவசிகாமணி நினைவு – இலக்கியப் பரிசு, திருப்பூர் தமிழ்ச் சங்கப் பரிசு ஆகியவற்றைப் பெற்றுள்ள இவர் அறிவொளி இயக்கப் பணிகளுக்காக மால்கம் ஆதிசேஷய்யா விருது பெற்றுள்ளார். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கொள்கை நெறி கொண்ட அவர் தமது படைப்புகளில் அதனை தொனிக்கச் செய்கிறார்.

Back to Top