Search

எங்கெல்ஸ் 200 பங்களிப்புகளும் வரம்புகளும் / Engles 200 Pangalippugalum Varambugalum

20.00

Category : Marxism
ISBN : 9788123440316
Author : Marcello Musto
Translator : S. V. Raja durai
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A4384

Qty
Compare

In Stock

வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின்படி. வரலாற்றில் இறுதியாகத் தீர்மானிக்கக்கூடியவை யதார்த்த வாழ்வை உற்பத்தி செய்தலும் மறுஉற்பத்தி செய்தலும் ஆகும். இதற்குமேல் மார்க்ஸோ நானோ எதையும் எப்போதும் கூறியதில்லை. எனவே. எங்கள் கூற்றை. பொருளாதாரக் காரணி மட்டுமே தீர்மானிக்கக்கூடிய ஒரே காரணி என நாங்கள் சொல்வதாக யாரேனும் திரித்துக் கூறுவாரேயானால். அவர் இந்தக் கருத்தோட்டத்தை அர்த்தமற்ற, அருவமான. அறிவுக்குப் பொருத்தமற்ற சொற்றொடராக மாற்றுகிறார். பொருளாதார நிலைமை என்பது அடித்தளம். ஆனால் மேல்கட்டுமானத்தின் பல்வேறு கூறுகள், வர்க்கப் போராட்டத்தின் அரசியல் வடிவங்கள், அதன் விளைவுகள் (எடுத்துக்காட்டாக, போர்க்களத்தில் வெற்றிபெற்று வந்த ஒரு வர்க்கம் உருவாக்குகிற அரசியல் சாசனங்கள் போன்றவை), நீதி முறைமைகள், இந்த யதார்த்தமான போராட்டங்கள். அவற்றில் பங்கேற்போரின் மூளையில் ஏற்படுத்தும் மறுவினைகள், அரசியல். நீதிபரிபாலன. தத்துவக் கோட்பாடுகள். சமயச் சிந்தனைகள், மீற முடியாத புனிதக் கோட்பாடுகளாக அவை அடையும் வளர்ச்சி ஆகியனவும் வரலாற்று முக்கியத்துவமுடைய போராட்டங்களில் தமது செல்வாக்கைச் செலுத்துகின்றன. பல சமயங்களில் அந்தப் போராட்டங்களின் வடிவத்தைத் தீர்மானிப்பதில் முதன்மைக் கூறாய் அமைகின்றன. (F.Engels to Joseph Bloch, 21[22] September 1890, Marx Engels Collected Works, Vol.49, Progress Publishers, Moscow, 2001, pp 33-35).

Back to Top