Search

ஆப்ரகாம் லிங்கன் / Abragam Lincoln

120.00

  • ISBN : 9788188048014
  • Author : R. sengalvarayan
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2009
  • Pages : 178
  • Code no : AP050
  • Qty
    Compare

    In Stock

    லக வரலாற்றில் இடம்பெற்ற பல தலைவர்கள் மிக எளிய குடும்பத்தில் பிறந்து தங்களின் அறிவாற்றலாலும், மக்கள் தொண்டாலும் மிக உயர்ந்த இடத்தை அடைந்துள்ளார்கள். அந்த வரிசையில் அமெரிக்காவின் பதினாறாவது குடியரசுத் தலைவர் ஆப்ரகாம் லிங்கன் ஆவார்.
    ஆப்ரகாம் லிங்கன் இளமையில் வறுமை நிலையில் கூலிவேலை செய்து வெவ்வேறு பள்ளிகளில் பன்னிரண்டு மாதங்களே
    படித்தவர். தன் முயற்சியால், நண்பர்களின் உதவியால் சட்ட நூல்களைத் தானாகவே படித்து வழக்குரைஞர் தேர்வில் வெற்றி பெற்றவராவார்.
    பிறரைப் போல் பேசிக்காட்டுவதில் வல்லவர். லிங்கனின் அறிவுப்பசி அவருக்கு அமெரிக்க விடுதலைப் போரின்மீது பற்றையும் விடுதலைப் போர் வீரர்கள்மீது மதிப்பையும் ஏற்படுத்தியது.
    ஆப்ரகாம் லிங்கன்- வரலாற்றில் அருமையான பெயர்- வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வைராக்கியம் உள்ளவர்களுக்கு அது ஒரு உந்து சக்தி! அடிமைத்தளையை அறுத்தெறியும் திசையில் அவர் ஒரு ஆவேசம்-கறுப்பு வைரம்.
    எளியநடை, எடுத்தால் படித்து முடிக்க வேண்டும் என்று ஆவலைத் தூண்டும் ஆற்றொழுக்கு- இந்நூலின் தனிச் சிறப்பாகும்.

    Back to Top