Search

-10%

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்?

4,320.00

Book Title : நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்?
Category : Essay
Edition : 2
ISBN : 9788123433653
Author : Periyar E.V.Ramasamy
Translator : Pasu. Gauthaman
Binding : Hard Bound
Publishing Year : 2020
Language : Tamil
Pages : 4100
Code no : A3666

Qty
Compare

In Stock

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்?

இந்து பாசிச சக்திகளை ஏற்கெனவே எதிர்த்துப் போராடிய அனுபவம் வாய்ந்த தலைவர்களின் கருத்துகள் நமக்குத் தேவைப்படுகின்றன. ஏற்கெனவே அம்பேத்கர் நூல்கள் அனைத்தையும் தமிழ்ப்படுத்தி வெளியிட்டுள்ளோம். பெரியாரும் நமக்கும் உதவிகரமாக இருப்பார். அதனாலேயே பெரியார் எழுத்துகளை இப்போது வெளியிடுகிறோம்.
ஆர்.நல்லகண்ணு
காலத்தின் தேவை பெரியாரின் போதனைகள். அவர் எழுதியதைப் படித்து பேசியதைக் கேட்டு, பேசிய மேடைப் பேச்சு நடையிலேயே அவரது பல்லாண்டுப் பணியில் வெளியான கருத்துகளை தொகுத்து ஒரு நூலில் அடுக்கி அச்சிட்டு, நம் மக்களுக்கு, பண்பட்ட சிந்தனையாளர், எழுத்தாளர் பசு. கவுதமன் வழங்குவது மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழ் மக்களுக்குச் செய்யும் நற்சேவை இது.
தா.பாண்டியன்
குடும்பம், சாதி, கோயில் சார் விழாக்களுக்குப் பதில் பகுத்தறிவார்ந்த, அறிவுசார் விழாக்களை நடத்த வேண்டியதன் அவசியத்தை விளக்கிய பெரியார் நமக்கு மிக அவசியம் – இவரை நமக்கானவராக ஆக்கிக்கொள்ள இந்தத் தொகுப்பு உதவட்டும்.
வ.கீதா
பெரியார் ஆக்கங்களை வாசிப்போர் எண்ணிக்கை கூடி வருவதாகவே கருதுகிறேன். இச்சூழல் மனதிற்கு மகிழ்வளிக்கும் சூழல். இதில் பசு.கவுதமன் அவர்களின் செயல்பாடுகள் தனித்த தன்மைகளை உள்வாங்கியவை. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சமூக வரலாறு பெரியாரின்றி நிறைவு பெறாது, இருபத்தோராம் நூற்றாண்டில் அவ்வரலாற்றை வாசிக்கும் ஆவணம் இது. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்வர் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
வீ.அரசு
சமூக அறத்தின் அப்பட்டமான தீவிர வடிவம் தந்தை பெரியார். பெரியாரின் நேரடியான பேச்சு மொழி, எழுத்து மொழி எந்த விதமான திருத்தமும் இன்றி அப்படியே வழங்கப்படும்போது ஒரு நெருக்கத்தையும் அந்தியோன்யத்தையும் கொண்டு வருகின்றன.
ந.முத்துமோகன்
சித்திரபுத்திரன் என்பது ஒரு வகையில் அழிவின் குறியீடு, தம் மக்களுக்கு எதிரான ஆதிக்கச்
சிந்தனையழிவினைப் பெரியார் இப்பெயரில் முன்வைத்தது பொருத்தமே. பெரியாரின் படைப்பாக்கங்களில் இதுவரை தொகுப்பாக வெளிவராத இப்பகுதியை அரிதின் முயன்று தொகுத்துத் தரும் பெரியாரியஅறிஞர் தோழர் பசு.கவுதமனின் பணி போற்றுதலுக்குரியது.
இரா.காமராசு

Back to Top