Search

-10%

இந்திய வரலாறு

900.00

Book Title : இந்திய வரலாறு (Indian History)
Edition : 1
Category : History
Author : Dr. N. Subramanyan
ISBN : 9788123408255
Weight : 500gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2018
Page : 800
Code : A1238

Qty
Compare

In Stock

இந்திய வரலாறு

இந்தியக் குடிமக்கள் யாவரும் அறிந்திருக்க வேண்டியது இந்நாட்டின் அரசியல் மற்றும் சமுதாய வரலாறு. இது குறைந்தது 30 நூற்றாண்டுக்கால அளவினதாய் வரலாறு, இந்நூல் சுருக்கமாக, ஆனால் எந்த முக்கியமான செய்திகளையும் விடாமல் எழுதப்பெற்றுள்ளது. இதில் 14 அரசகுல முறைப் பட்டியல்கள், 28 வரைபடங்கள் மற்றும் சிந்துவெளி நாகரிகம் தொடங்கி ஏறத்தாழ 1950 வரையுள்ள முக்கியமான வரலாற்று நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இந்நூலின் அருமையை உணர்ந்து ஆசிரியர்களும், மாணவர்களும், பொதுமக்களும் விரும்பிப் படித்து பிருந்த ஆதரவு தருவார்கள் என்பது எமது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஆகும்.

நூலாசிரியர்:

பேராசிரியர் டாக்டர் வித்துவான் ந.சுப்ரமண்யன் தமிழகம் பெற்ற சிறந்த வரலாற்றாளர்களில் ஒருவர், இவர் தமிழறிஞர் ந.பலராம ஐயர் அவர்களின் மகனாக 1915இல் பிறந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., பி.எச்.டி. (டாக்டர்) பட்டங்கள் பெற்றதோடு, அமையாது சென்னைப் பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற ஆசிரியர்களிடம் வரலாறும் சுற்று ஆங்கில இலக்கிய ஆய்விலும் அறிஞர்களால் போற்றப் பெற்றவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் வரலாறு. சமூகவியல், உளவியல், இலக்கிய ஆய்வு, வரலாற்று வரைவியல், வாழ்க்கை வரலாறு. ஆங்கிலத்திலும் தமிழிலும் பல கவிதைகள் இயற்றுதல் என்னும் பலதரப்பட்ட கல்வித்துறைகளில் புகழ்பெற்றவர். சங்ககால வாழ்வியலிலிருந்து காந்தியடிகளின் செயற்பாடுகள் பற்றிய ஒரு நூல் வரை இவர் 110 நூல்கள் இயற்றியுள்ளார். இவற்றில் Sangam Iolity (ஆங்கிலத்தில்), சங்ககால வாழ்வியல், தமிழக வரலாறு (தமிழில்) ஆகிய நூல்கள் பரிசுகள் பெற்றவை. இவர் சென்னை, மதுரை-காமராஜர், ஷில்லாங் நேகு (NEHU-வடகிழக்கு இந்திய மக்கள் பல்கலைக்கழகம்) என்பனவற்றில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இவர் அகில இந்திய வரலாற்று ஆய்வுக்கழகம் மற்றும் தமிழக வரலாற்று ஆய்வுக்கழகம் முதலிய கழகங்களில் உறுப்பினராய் இருந்தவர், இவர் ஐந்து அகில இந்திய வரலாற்று மாநாடுகளுக்குத் தலைமை வகித்தவர். இவர் பெயரால் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவு அறக்கட்டளையொன்று நிறுவப்பெற்றுள்ளது. இவர் தனது வாழ்க்கை வரலாற்றினை (1991 வரை) ‘என் வாழ்க்கை வரலாறு’ என்னும் பெயரில் நூலாக எழுதியுள்ளார்.

 

 

Back to Top