Search

தொடுதிரை யுகத்தில் அம்பேத்கர் / Thoduthirai Yugathil Ambedkar

100.00

ISBN : 9788123443522
Author : RAVIKUMAR
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no :A 4705

Qty
Compare

In Stock

அம்பேத்கரின் சிந்தனைகளிலிருந்து ஜனநாயகம் என்பதன் அரசியல், சமூகப் பண்பை இந்நூல் நம்முன் விரித்துப் போடுகிறது. ஜனநாயகம் என்பது ஒரு அரசியல் கோட்பாடு, சமூக அமைப்பு என்பதைத் தாண்டிய வாழ்க்கைத் தத்துவம் என்று அம்பேத்கர் கூறியதை இந்நூல் கவனப்படுத்துகிறது.

ஜனநாயகத்தின் சமூகப் பண்பாக சகோதரத்துவம் செயல்படுகிறது. இச்சகோதரத்துவம் சிதைந்ததன் வாயிலாகவே சனாதனம் இன்று பாசிசமாக உருமாற்றிவிட்டது. இன்றைய பாசிசத்தால் சிறுபான்மையினர், தலித்துகள், பெண்கள் முதலான வகைப்பாட்டினர் வேறெப்போதைக் காட்டிலும் தற்போது சிதிலமாகி வருகின்றனர். கடும் சேதாரத்திற்கு ஆட்படும் தலித்துகள் ஜனநாயகத்தின் சமூகப் பண்பான சகோதரத்துவத்தை வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக ‘பட்டியலினம்’ எனும் சொல்லின் வாயிலாக சாதித் திரட்சியை இன்று முன்வைப்பதை இந்நூல் கவனத்தோடு விவாதிக்கிறது.

தலித்திய கோட்பாட்டின் மூலவர்களில் ஒருவரான ரவிக்குமார் தலித் என்ற சொல்லை அதன் பண்பாட்டுச் செறிவோடும், சமூக உறவாடல் தன்மையோடும் வளர்த்தெடுத்தார். இந்நூலில் தலித் என்பதை சாதியை மறுக்கும் ஒருவர் பிரக்ஞைபூர்வமாகத் தேர்வு செய்துகொள்ளும் தன்னிலைத்துவமாக வளர்த்தெடுக்கிறார். தன்னிலைத்துவம் சாதி அடையாளமாகச் சீரழியும்போது உண்டாகும் ஆபத்தையும் இந்நூல் வாயிலாகக் கவனப்படுத்துகிறார்.

சனாதனத்தை இடைமறித்து உரையாடல் நடத்துவதற்கும், அதன் வாயிலாக ஒருவரோடு ஒருவராகக் கலப்பதற்கும் அம்பேத்கர் முன்வைத்திருக்கும் ஜனநாயகக் கோட்பாடு இன்றைய சூழலில் நமக்கு எவ்வாறு பயன்தரும் என்று இந்நூலில் ரவிக்குமார் சுட்டிக்காட்டுகிறார்.

அ.ஜெகன்னாதன்

Back to Top