Search

சென்னை பல்கலைக்கழகமும் நீதிக்கல்வியும் (1857-1907) / Chennai Palkalaikazhagamum Needhi Kalviyum (1857-1907)

150.00

ISBN : 9788123439341
Author : Dr. M. Sundhar
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2019
Code no : A4277
Pages : 140

Qty
Compare

In Stock



பிறந்தது முதல் தற்போது வரை இவர் வசிக்கும் இடம் சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை தொடக்கக் கல்வியை தனலட்சுமி நடுநிலைப் பள்ளியிலும் உயர்நிலைக் கல்வியை பி.ஏ.கே. பழனிசாமி உயர்நிலைப் பள்ளியிலும் மேல்நிலைக் கல்வியை கே.சி.சங்கரலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றவர். வேதியியலில் இள அறிவியல் பட்டப் படிப்பினை மாநிலக் கல்லூரியில் பயின்றவர். ‘சென்னைப் பல்கலைக்கழகத் தமிழியல் ஆய்வு வரலாறு (1927-1980)” என்ற தலைப்பினை முனைவர் பட்ட ஆய்வுக்காகத் தேர்ந்தெடுத்து, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை வாயிலாக பகுதி நேரமாகப் பயின்று முனைவர் பட்டம் பெற்றவர்.

1989 செப்டம்பர் முதல் 1993 அக்டோபர் வரை தனியார் நிறுவனம் ஒன்றில் நிர்வாக இயக்குநரின் நேர்முக உதவியாளராகவும் சுருக்கெழுத்தராகவும் பணியாற்றியுள்ள இவர், நவம்பர் 1993 முதல் ஜூலை 2000 வரை தான் கல்வி பயின்ற பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஜூலை 2000 முதல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் இவர் தற்போது பிரிவு அலுவலராக உள்ளார்.

Back to Top