Search

-10%

சமயங்கள் சமுதாய் அடிப்படை மாற்றத்திற்காகவே

162.00

Category: Dalitism
Translator: A.Andhoni Kurusu
ISBN: 9788123445151
Binding: Paper Back
Publishing Year: 2014
Language: Tamil
Pages: 235
Code: A3031

Qty
Compare

In Stock

சமயங்கள் ஆய்வில் அடிப்படையான இரண்டு அணுகுமுறைகள் உள்ளன. ஒன்று அனுபூதி தன்மையைச் சார்ந்தது மற்றொன்று இறைவாக்கு தன்மையைச் சார்ந்தது. டாக்டர் ஆ.அலங்காரம் இறைவாக்குத் தன்மையைச் சார்ந்த அணுகுமுறையைத் தொடர்ந்து பின்பற்றுவதோடு, சமயங்களின் விடுதலை சாத்தியக் கூறுகளை குறிப்பாக இந்து மற்றும் கிறிஸ்தவ சமயங்களில் இருப்பதை ஆய்வு செய்கிறார். இவரைப் பொறுத்தவரையில் விவேகானந்தரின் உலகளாவிய தர்மம் பற்றிய கனவானது இந்து சமயத்தை மறுவிளக்கம் செய்வதற்கான ஆதாரமாக இருக்கிறது, மேலும் இவர் புதிதாக கிறிஸ்தவ சமயத்தை புரிந்துகொள்ள இயேசுவின் இறையாட்சிக் கனவைத் தொடர்ந்து மேற்கோள் காட்டுகிறார். இந்தப் புத்தகம் தனிமனித சமூக மற்றும் ஒருங்கிணைந்த மனித விடுதலையை மையமாகக் கொண்டது.
முனைவர் பேரா.செபஸ்தியான் பயினடெத்.
இயக்குனர், சமிக்ஷா சமய நல்லிணக்க உறையாடல் மையம், காலடி, கேரளா சுவாமி விவேகானந்தரது 150-ஆம் ஆண்டு பிறப்பின் நிறைவினை உலகமே ஜனவரி 12 கொண்டாடி மகிழ்ந்தது. அவரது சிந்தனை பதிவுகளது எட்டுத் தொகுதிகளையும் வரி விடாமல் வாசித்து ஆராய்ச்சி செய்துள்ளார். அருள்திரு. ஆ.அலங்காரம் அடிகளார் அவரது புரட்சிகரமான சிந்தனைகள் ஓராங்கட்டப்பட்ட. ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணையவும், மதம் கடந்து ஏழைகள் கூட்டு ஒருமைப்பாடு கொண்டு விடுதலை பெறவும், செய்ய வேண்டிய செயல் திட்டங்களுக்குப் புதிய பாதை. புதிய திசை காட்டுகிறது, நூலின் தனித்துவமே இதுதான், காலத்தின் அடையாளமாக வெளிவரும் இந்த நூல், இன்றைய இளைய தலைமுறையினருக்கும். எதிர்காலச் சந்ததியினருக்கும் சிந்தனை விருந்தும் இனிய மருந்துமாகிறது எனலாம். இதை எல்லோரும் வாசித்து. வாழ்வாக்கி, பயன்பெற்றுச் சிறப்புறுவார்களாக.

முனைவர் ஆ.செல்வம்
தேர்வு நெறியாளர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி

Back to Top