Search

-10%

ஒண்டிக்காரன் பண்ணையம்

122.00

  • Book Title : ஒண்டிக்காரன் பண்ணையம் (Ondikaran Pannaiyam)
  • Author : மா. நடராசன்
  • ISBN : 9788188048069
  • Binding : Paper Back
  • Publishing Year : 2015
  • Language : Tamil
  • Pages : 260
  • Code : AP015

 

Qty
Compare

In Stock

ஒண்டிக்காரன் பண்ணையம்

ஒண்டிக்காரன் பண்ணையம் கோவை மாவட்டச் சிற்றூர் ஒன்றில், எளிய வேளாண் குடும்பத்தில் பிறந்த மா.நடராசன், நாட்டுப்புறக் கலைகளில் ஈடுபாடும் தேர்ச்சியும் பெற்றவர். ஓயில் கும்மி பற்றி ஆய்வு செய்துகொண்டிருப்பவர். அமரர் பிரதிபா இராசகோபாலன் படைப்புகளை ஆய்வு செய்தவர். வானம்பாடி இயக்கத்தின் பிற்பகுதியில் தன்னை இணைத்துக்கொண்டவர். இவரது சிறுகதைத் தொகுதி ‘இன்னொரு வடிவம்’, கொங்கு வட்டார இயல்புகளைப் பதிவு செய்யும் இலக்கியப் படைப்பு.
இந்நூல் உழவுத் தொழிலின் சிதைவைச் சித்திரிக்கும் சமகாலப் பதிவு தமிழ் மொழி வழிக்காகத் தீவிரமான அக்கறை காட்டும் மா.நடராசன், கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பாளராக இருந்து, ஏழை எளிய மக்களின் கல்விக்கண் திறக்கப் பாடுபட்டு வருபவர்.
பாரதியார் பல்கலைக் கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும், செனட் பேரவை உறுப்பினராகவும் இருந்து பணியாற்றிய இவர், தற்போது பணியாற்றி வருவது கோவைப் புதூர் சி.பி.எம். கலைக் கல்லூரியில்.
கோவைப் பகுதி இலக்கிய எழுச்சியின் இதயத்துடிப்பு முனைவர் மா.நடராசன்.

– கவிஞர் புவியரசு

Back to Top