Search

இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்

1,100.00

ISBN : 9788123443942
Author : Deviprasad Chattopadhyay
Translator : Karichan kuinchu
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2023
Code no : A4748

Qty
Compare

In Stock

தேவிபிரசாத் சட்டோபாத்யாயா: (1918-1993)
இந்தியாவின் தலையாய மார்க்சிய தத்துவ அறிஞர். இந்திய தத்துவம் என்றாலே அது கருத்துமுதல்வாதம், ஆன்மிகம் என்ற சிந்தனை ஓரளவேனும் மாற வழிவகுத்தவர். இந்திய தத்துவத்தின் பொருள் முதல்வாத பள்ளிகளை கவனப்படுத்தியதில் அவர் பங்கு மிகப் பெரியது. ‘லோகாயுதா – பண்டைய இந்தியப் பொருள்முதல்வாதம்” என்ற நூல் உலகப் புகழ்பெற்றது. இவை தவிர ‘இந்திய நாத்திகம்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர். மனைவியும் திபேத்திய மொழி அறிஞருமான அல்கா மஜும்தார் சட்டோபாத்யாயா உதவியுடன் தாரநாதாவின் இந்தியாவில் பௌத்தத்தின் வரலாறு நூலை திபேத்திய மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து பதிப்பித்ததும் பெரும் சாதனை எனலாம்.

கரிச்சான் குஞ்சு: (1919-1992)
ஆர். நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட கரிச்சான் குஞ்சு, இளமையிலேயே தந்தையை இழந்து பல வேதபாடசாலைகளில் சமஸ்கிருதம், வேதம் ஆகியவற்றோடு தமிழும் கற்றவர். பல பள்ளிகளில் ஆசிரியராக சொற்ப ஊதியத்தில் பணியாற்றியுள்ளார். சுமார் 200 சிறுகதைகளும் ‘பசித்த மானுடம்’ எனும் தனது காலத்திற்கு முந்தைய கருப்பொருள் கொண்ட நாவலையும் எழுதியுள்ளார்.

என்.சி.பி.எச் நிறுவனத்தின் சகோதர நிறுவனமான பீப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ் பதிப்பித்த ஆங்கில நூலின் (What is Living and what is dead in Indian Philosophy – 1976) தமிழ் மொழிபெயர்ப்பு. ‘இந்திய தத்துவம்’ எனப் பொதுவான பெயரில் அறியப்படும் ஆறு ‘தரிசனங்கள்”, அவற்றை மறுத்த பௌத்தம், சமணம், ஆசீவகம் மற்றும் இவை அனைத்திற்கும் வெளியில் நிற்கும் சமரசமற்ற பொருள்முதல்வாதமான லோகாயுதம் ஆகிய அனைத்தும் குறித்து அறிவியல் பூர்வமான அறிமுகத்தையும், பகுப்பாய்வையும் வழங்கும் ஒப்பற்ற நூல். இந்திய மதங்கள், சமூகம், வரலாறு ஆகியவற்றை புரிந்துகொள்ளும் முயற்சியும், ஆர்வமும் கொண்ட எவரொருவரும் கட்டாயம் வாசித்திருக்க வேண்டிய இன்றியமையாத நூல்.

Back to Top