Search

அனைத்துலக அளவிலும் இந்திய அளவிலும் இடதுசாரிகள் முன் இருக்கும் சவால்கள்

75.00

ISBN : 9788123443713
Author : Kobad Ghandhi
Translator : S. V. Rajadurai
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2022
Pages : 70
Code no : A4725

Qty
Compare

In Stock

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, 2022 செப்டம்பர் 17இல் விஜயவாடாவில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கத்தில் கோபாட் காந்தி ஆற்றிய உரையின் விரிவாக்க வடிவத்திலுள்ள இத்தமிழாக்கம், பொதுவாக உலக அளவிலும் குறிப்பாக இந்திய அளவிலும் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கான காரணங்கள் என்று அவர் கருதுவதை இடதுசாரி சக்திகளின் உரத்த சிந்தனைக்காகவும் தொடர்ந்த விவாதங்களுக்காகவும் முன்வைக்கிறது. இந்தியாவிலும் உலகெங்கிலுமுள்ள மார்க்ஸியப் பொருளியல் அறிஞர்களால் இதுவரை விவாதிக்கப்படாத ஒரு முக்கிய பிரச்சினை பற்றிய – உலக மக்களை செயற்கை இயந்திர மனிதர்கள் போல அடிமைகளாக்குவதற்காக உலக முதலாளியத்தின் தலைமைச் சக்திகள் தீட்டிக் கொண்டிருக்கும் மிக அபாயகரமான திட்டங்கள், அவற்றுக்கு ஐக்கிய நாடுகள் அவை தரும் ஒத்துழைப்பு என்ற பிரச்சினை பற்றிய – கோபாட் காந்தியின் விவரணைகள், ‘டிஸ்டோப்பிய’ அறிவியல் புனைகதைகளிலும், திரைப்படங்களிலும் காண்பிக்கப்படும் சமுதாயங்களை ஒத்த ஓர் உலகை உருவாக்க உலக முதலாளியம் முயன்று வருவதை உணரச் செய்கின்றன. மேலும், இந்தியாவில் ஜனநாயகப் புரட்சியை நடத்துவதற்குத் தேவையான சில நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும் அவர் பார்ப்பனிய-சாதி அமைப்பைத் தகர்த்தெறியும் அம்பேத்கர். பெரியார் சிந்தனைகளையும் அவர்களது செயல்பாடுகளின் ஆக்கபூர்வமான கூறுகளையும் முன்னெடுத்துச் செல்வது இன்றியமையாதது என வலியுறுத்துகிறார்.

Back to Top