Search

-10%

பனையடி / Panaiyadi

225.00

Category : Novel
ISBN : 9788123441436
Author : R. Selvam I.A.S
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2021
Code no : A4496
Pages : 208

Qty
Compare

In Stock

எளிய வேளாண் குடும்பத்தில் பிறந்து
இந்திய ஆட்சிப் பணியின் உயரிய இலக்குகளைத் தொட்ட இரா.செல்வம் ஐ.ஏ.எஸ். இமாச்சலப் பிரதேசத்தில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியவர். மாநில, ஒன்றிய அரசின் பல துறைகளில் முத்திரை பதித்துத் தேசிய விருதுகள் பல பெற்ற இவரின் ஊர் அரியலூர் மாவட்ட அய்யப்ப நாயக்கன்பேட்டை கிராமம். இளங்கலை (வேளாண்மையை) கிள்ளிகுளத்திலும், முதுகலையை கோவையிலும் முடித்து பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பெற்றார். வேளாண் அலுவலராக திருமானூர் அரியலூரில் பணியாற்றி ரயில்வே பணியில் சேர்ந்தார். தற்போது தோல்பொருட்கள் ஏற்றுமதிக் கழகத்தில் செயல் இயக்குனராக சென்னையில் உள்ளார். ‘தினமணி’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ‘பைனான்சியல் டைம்ஸ்’ போன்ற பத்திரிகைகளில் எழுதிக்கொண்டுள்ளார். அல்புனைவில் தொடங்கிய இவரது எழுத்து இப்போது புனைவாகப் பரிணமித்துள்ளது. பனையடி இவரது முதல் நாவல். ‘பனையடி’, எழ விரும்பும் எளிய இளைஞர்களுக்கான முன்னடித்தடம். மண் மேவிய தரைப்பலகை விரித்த அரசுப் பள்ளியில் கற்கும் தமிழ் எனும் சராசரி மாணவன் கால் முடக்கிய அவமானங்களையும் துயர்களையும் நெற்றி வியர்வையை வழித்தெறிவதுபோல உதறி எழுகிறான். “கரைக்குள் காட்டாறு அடங்க வேண்டியதில்லை’ என்ற ஒற்றை வரியைப் பற்றி மேலேறும் தமிழின் வாழ்க்கைப் போராட்டம் சாமானியரின் வம்ச சரித்திரப் பக்கங்களால் நிரம்பியது. புழுதிபடிந்த ஊரிலிருந்து வரும் இளையோர்கள் கடக்க வேண்டிய கொடுந்தருணங்களை எதார்த்தமாகச் சொல்கிறது நாவல்.

Back to Top