Search

-10%

சட்டப்பேரவையில் ஜீவா

333.00

Book Title : சட்டப்பேரவையில் ஜீவா (Sattaperavaiyil Jeeva)
Edition : 2
Category : Politics
ISBN : 9788123420608
Author : K. Jeeva Bharathi
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2023
Pages : 328
Code no : A2428

Qty
Compare

In Stock

சட்டப்பேரவையில் ஜீவா

“52-57ல் தமிழக சட்டமன்றத்தில் ஜீவா உறுப்பினராக இருந்தார். அங்கு ஜீவா பேசிய பேச்சுக்களை வரிவிடாமல் கவிஞர் ஜீவபாரதி தொகுத்து ‘சட்டப் பேரவையில் ஜீவா’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டிருக்கிறார். இந்த ஒரு நூலைப் படித்தால்போதும் – ஜீவாவின் சிறப்பை அறிந்துகொள்ளலாம். இந்தக் காலகட்டத்தில் தி.மு.க.வோ அண்ணாதுரையோ சட்டமன்றத்திற்குச் செல்லவில் லை. அப்போது சட்டமன்றத்தில் தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும் என்று ஜீவா பேசியிருக்கிறார். தமிழ் மொழிக்காக சட்டமன்றத்தில் ஒலிந்த முதல் குரல் ஜீவாவின் குரல்தான். பயிற்று மொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் தமிழ் இடம்பெற வேண்டும் என்று மட்டும் ஜீவா முழங்கவில்லை; தமிழ்நாட்டிலிருந்து உச்சநீதி மன்றத்திற்கு ஒரு வழக்கு சென்றால், அந்த வழக்கின் தீர்ப்பைத் தமிழில்தான் வழங்கவேண்டும் என்றும் ஜீவா வலியுறுத்தியிருக்கிறார். பாவேந்தர் பாரதிதாசன் தமிழை மூச்சாகக் கருதினார். அதுபோன்று ஜீவாவை மூச்சாகக் கொண்டவர் கவிஞர் ஜீவபாரதி”

திரு. தமிழருவிமணியன் (காந்திய மக்கள் இயக்க நிறுவனத் தலைவர்)

Back to Top