Search

-10%

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்

126.00

Book Title : நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் (Nugarvor Pathukappu Sattam)
Edition : 1
Category : Law/Order
ISBN : 9788188049097
Author : Pulamai Venkatachalam
Weight : 120.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2023
Pages : 110
Code no : T019

Qty
Compare

In Stock

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்

வழக்கறிஞர் புலமை வேங்கடாசலம் அவர்கள், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி
வட்டம், புள்ளவராயன் குடிக்காட்டில் பிறந்தவராவார். இவர், பி.ஏ. தமிழ் இலக்கியப் படிப்பை, பூண்டி திரு. புட்பம் கல்லூரியினும், எம்.ஏ. தமிழ் இலக்கியப் படிப்பை, திருச்சி தேசியக்கல்லூரியிலும், பி.எல் சட்டப்படிப்பை, சென்னை சட்டக் கல்லூரியிலும் பயின்றார். இவர், திருநெல்வேலி மாவட்டம், மேல நீலித நல்லூரில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கலைக்கல்லூரி, தமிழ்ப் பல்கலைக்கழக மொழி பெயர்ப்புத்துறை, வாழ்வியற் களஞ்சிய மையம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் எழுதிய இந்துத் திருமணச் சட்டம் என்னும் புகழ்வாய்ந்த நூலுக்கு, தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் முதல் பரிசு அளித்து, இவரைச் சிறப்புச் செய்துள்ளது. சட்டத் தமிழ் அகராதி. தமிழ்ப் பல்கலைக்கழக வாழ்வியற் களஞ்சிய 15 தொகுதிகளுக்குரிய சட்டக்கட்டுரைகள். சிறப்புத் திருமணச் சட்டம், சீவனாம்ச வழக்கு, புலன் விசாரணை: அறிவொளி இயக்கத்தால் வெளியிடப்பட்ட உயில், ஜாமினில் எடுப்பது எப்படி? கையாடல், மோசடிக் குற்றங்கள், தாமரை பப்ளிகேஷன் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்ட திருமணமும் விவாகரத்தும், இந்திய வனச் சட்டம். இந்தியத் தண்டனைச் சட்டம், மதுரை நேஷனல் லாபுக் ஏஜன்சி நிறுவனத்தாரால் வெளி யிடப்பட்ட குற்றவியல் நீதிமன்றங்களில் வழக்கு மனுக்கள் தாக்கல் செய்யும் நடைமுறை போன்ற சட்ட நூல்கள் பலவற்றையும் பல்வேறு தலைப்புகளில் வரலாற்று நூல்கள். கவிதை நூல்கள் பலவற்றையும் இவர் எழுதியுள்ளார். இவர் சிறந்த வழக்கறிஞர், சிந்தனையாளர், எழுத்தாளர், பேச்சாளர். நீதிமன்றங்களில் தமிழில் முதன் முதலில் பேசிய தகைமையாளர். இவரது தமிழ்த்தொண்டு சிறக்க எமது வாழ்த்துக்கள்.

 

Back to Top