Search

-9%

லெனினின் போராட்ட வாழ்க்கை

50.00

Book Title : லெனினின் போராட்ட வாழ்க்கை  (Leninin poaraatta vazhkkai)
Category : Articles
Edition : 1
ISBN : 9788123446264
Author : G. Zinoviev
Translator : Ma. SivaKumar
Weight : 100gm
Binding : Paper Back
Language : Tamil
Pages : 56
Publishing Year : 2024
Code no : A5026

Qty
Compare

In Stock

லெனினின் போராட்ட வாழ்க்கை

கிரிகோரி ஜினோவீவ் உக்ரைனில் பிறந்தவர். 1901ஆம் ஆண்டில் ரசிய சமூக ஜனநாயகக் கட்சியில் சேர்ந்த அவர் 1903ஆம் ஆண்டு கட்சிப் பிளவின்போது லெனினின் போல்ஷ்விக் தரப்பில் இருந்தார். லெனின் தலைமறைவாக வெளிநாட்டில் வாழ்ந்தபோது ஜீனோவிவ் அவருடன் பணிபுரிந்தார். 1917 பிப்ரவரிப் புரட்சிக்குப் பிறகு ரசியாவுக்குத் திரும்பினார். அக்டோபர் புரட்சியைத் தொடங்க வேண்டும் என்ற லெனினின் முன்மொழிவை எதிர்த்து லெனினின் மனக்கசப்பை ஈட்டினார். புரட்சிக்குப் பிறகு சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியிலும் அரசிலும் முக்கியப் பதவிகள் வகித்தார். 1919 முதல் 1926 வரை கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைவராகப் பணியாற்றினார்.
1918ஆம் ஆண்டில் லெனின் சோசலிஸ்ட் புரட்சியாளர்கள் கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவரால் சுடப்பட்டார். படுகாயமடைந்த அவரது உடல்நலம் தேறி மீள்வதை உலகெங்கிலும் இருந்த தொழிலாளி வர்க்கம் கவலையுடன் நோக்கியிருந்தது. அந்த நேரத்தில், ஜீனோவில் பெட்ரோகிராட் சோவியத்தின் ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். அதில் லெனினின் 25 ஆண்டுகால அரசியல் வாழ்வையும் பணியையும் பற்றி விவரித்திருந்தார். லெனினுடனும் சோசலிச இயக்கத்தின் பிற தலைவர்களுடனும் தனது நேரடி அனுபவங்களையும் ஜினோஜீவ் இதில் பதிவு செய்துள்ளார்.

Back to Top