Search

மார்க்சிய சிந்தனை / Marxia Chinthanai

60.00

ISBN : 8123410808
Author : L.G. Geethanandhan
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2006
Code no : A1507
Pages : 140

Qty
Compare

In Stock

அறிவியல் வரலாறு பின்புலத்தோடும் சமூக அறிவியல் வரலாற்றுப் பின்புலத்தோடும் மார்க்சியத்தின் தோற்றம் குறித்தும் அதன் உள்ளடக்கக் கூறுகள் குறித்தும் ‘ஒரு பருந்துப் பார்வையை” இந்நூல் அளிக்கிறது. மார்ச்சியம் குறித்து இதுவரை வெளிவந்துள்ள சிறந்த புத்தகங்களிலிருந்து தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்து அந்த நூல் குறிப்போடு ஆங்காங்கு தெளித்திருப்பது பல்வேறு’ நூல்களை வாசிக்கத் தூண்டும் நல்ல யுத்தியாகும். “தடைகளைத் தாண்டி மார்ச்சியம் வெற்றி பெறும்” என்கிற நூலாசிரியர் நம்பிக்கை வறட்டு நம்பிக்கை அல்ல; மாறாக சமூக அறிவியல் உண்மை”
என். வரதராஜன்

தோழர் எல்.ஜி, தோனந்தன் பேசும்போது சிரிக்கவைப்பதில் வல்லவர் எழுதும் போது சிந்திக்க வைப்பதிலும் வெற்றி கண்டுள்ளார். மார்க்சிய நூல்களைப் படித்தால் தடை தெருடலாக வருகிறது; சொற்பதங்கள் குழப்பத்தை
ஏற்படுத்துகின்றன; தமிழின் இனிமையே போய்விடுகிறது எனக் குறை கூறுவோர், இந்நூலைப் படித்த பின்னர் தங்களது கருத்தை
மாற்றிக்கொள்வர் என தம்பலாம். மார்ச்சிற்குப் புகழாரம் சூட்டுவோர் தேவை இல்லை. அதை நடைமுறைப்படுத்தும் மனிதர்கள்தான் தேவை. அத்தகைய மனிதப் படையைத் தயாரிக்க உதவுவதுதான் இந்நூலின் நோக்கம்.”
தா. பாண்டியன்

“மார்க்சியம் பற்றிய இந்நூல், இன்று அதில் ஏற்பட்டுள்ள பல பிரச்சனைகளுக்குப் பதில் அளிக்கிறது. மேற்கோள்கள் என்னும் அடிக்குறிப்புகள் என்றும் அவர் வாசகர்களை அச்சுறுத்தவில்லை. இன்று மார்க்சியத்தைப் பல கோணங்களில் நின்றுகொண்டு குழப்பும் முயற்சி நடைபெறுகிறது. இந்தத் தருணத்தில் இந்த நூல் வெளிவருவது அவசியமானதாகும்
எஸ். தோதாத்ரி

மார்க்சியத்தைப் படித்தறியவேண்டும் என்னும் ஆர்வம் என்றுமில்லாத அளவிற்கு உலகம் முழுவதும் தோன்றியுள்ளதை உணர்தல் வேண்டும். இந்தப் பின்புலத்தில் தமிழ் மக்களுக்கு மார்க்சிய கோட்பாடுகளை எளிய தமிழில் சிறந்த நடையில் தோழர் எல்.ஜி. கீதானந்தன் படைத்துள்ளார். இது பாராட்டி வரவேற்கத்தக்க முயற்சி”””

ஆர். பார்த்தசாரதி

Back to Top