Search

-10%

தோட்டக்காரன் / Thottakkaran

675.00

ISBN : 9788123443669
Author : Canute Raj
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2022
Code no : A4720

Qty
Compare

In Stock

நாம் மாற்றத்தின் தலைமுறையிலே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எல்லாம் மாறும் என்பதனை நடைமுறையாகக் கண்டுகொண்டிருக்கிறோம். மாற்றத்தின் சுவடுகள் அழிப்பனவையாகவும் படைப்பனவையாகவும் இருக்கின்றன. அழிப்பு வருத்தம் தருவதாயும், படைப்பு இன்னும் மேலேயென உந்தித் தள்ளுவதாயும் இருக்கின்றன. இரண்டும் ஒருசேர நடக்கவும் செய்கிறது. ஆனால், இந்த இரண்டையும் நம்மால் தவிர்த்து மாற்றத்தை எதிர்கொள்ள இயலவில்லை.

இந்தச் சூழலில் மனித குலத்தின் ஆதித் தொழிலான விவசாயமும் மாற்றத்திற்குத் தன்னை உட்படுத்திக்கொள்வது தவிர்க்க முடியாத மானுட வளர்ச்சியின் அடையாளம்.

மாற்றங்களின் தீவிரமான விளைவுகள் பாதிப்பது அடித்தளத்திலிருப்பவர்கள் அல்லது முன்னணியிலிருப்பவர்களைத்தான். அதை எதார்த்தமான மொழியில் சொல்லுவதானால், சாமான்ய மக்களே அதிகமாய், உடனடியே பாதிக்கப்படுவார்கள். இன்றைய சூழலில், சாமான்ய மக்கள் என்பவர்கள் விவசாயிகள்தான்.

இங்கே விழித்துக்கொண்டிருப்போரெல்லாம் பிழைத்துக்கொள்வார். நம் விவசாயம் மாறுதலுக்கு விழித்திருக்கிறதா?

Back to Top