Search

-10%

திருக்குறள்(யாப்பிலக்கண நோக்கில் செம்பதிப்பு) / Thirukkural (Yaapilakkana Nokkil Sempathippu)

360.00

ISBN : 9788123426044
Author : K. Kaliyaperumal
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A2953

Qty
Compare

In Stock

காலங்களாகவே உலகப்பொதுமறையாம் திருக்குறள் குறித்து அதன் தோற்றம், மரபு, சமயம் மற்றும் காலம் பற்றிய விவாதங்களும் ஆய்வுகளும் தொடர்ந்தவண்ணமிருப்பதே வள்ளுவத்தின் தனிச் சிறப்பு. அவ்வகையில் குறளில் யாப்புப்பிழை உளது எனும் ஒரு கூற்றும் தமிழறிஞர்களிடம் நெடுகாலம் உலவிவருவதாம். அதனைப் பதிப்புப் பிழை என்றே காணாது விடுவோருண்டு. ஆனால் தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் தொட்டு சிலர் யாப்புப் பிழை உளதை ஆய்ந்தறிந்து வெளிக்கொணர்ந்துள்ளனர்.

அவ்விதம் தமிழின் முக்கிய இலக்கண நூல்களான தொல்காப்பியம், யாப்பருங்கலக்காரிகை, நன்னூல் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமையும், தெளிதேற்றமுமுள்ள இந்நூலாசிரியர் திருக்குறளை யாப்பிலக்கண நோக்கில் வெகுநுட்பமாய் ஆய்ந்து துலங்குவதுடன் ஆராய்ச்சியுரை. தலைப்பு விளக்கங்கள் மற்றும் பொழிப்புரையென மிகவும் நேர்த்தியாகத் தொகுத்துள்ளார். திருக்குறளின் வளமையும் செழுமையும் மேம்படும் வண்ணமாக மிகக் கவனமுடன் தொகுக்கப்பட்டு வெளிவரும் இந்நூல் திருக்குறள் செம்பதிப்பு எனும் வகையில் தனித்த முக்கியத்துவம் பெறுகிறது.

Back to Top