Search

தமிழ் உணர்ச்சி தமிழ் வளர்ச்சி தமிழ் ஆட்சி / Thamizh Unarchi Thamizh Valarchi Thamizh Aadchi

140.00

ISBN : 9788123411217
Author : Dr. Pon Kothandaraman
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A715

Qty
Compare

In Stock

..தாமரைப் பூ இருக்கிறது. இந்தத் தாமரைப் பூவில் பல்வேறு இதழ்கள் இருக்கின்றன. ஒவ்வொரு இதழும் ஒரு அறிதுறையைப்போல. இன்று ஏராளமான அறிதுறைகள் வளர்ந்திருக்கின்றன. ஒவ்வொரு அறிதுறையையும் நாம் தமிழ்மக்களுக்குத் தமிழ் மூலந்தான் அறிமுகப்படுத்த வேண்டியிருக்கிறது – அல்லது புலப்படுத்த வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு அறிதுறையையும் ஒரு இதழ்போல நாம் நினைத்தால் தமிழ் என்பது தாமரைப் பூப்போல, தமிழ் என்பது அவ்வளவு பெரியது. தமிழ் என்பது இரண்டாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட விரிந்த கால எல்லைக்கு உரிய ஒரு சமுதாய வரலாற்றையே தன்னுள் பொதிந்துவைத்திருக்கின்ற ஒன்று. இன்னும் எதிர்கால வளர்ச்சிக்கு வேண்டிய வித்துகளைக் கூடத் தன்னுள் அடக்கி வைத்துப் பாதுகாத்துக்கொண்டிருக்கின்ற ஒன்று. இதை எண்ணும்போதுதான் கன்னித் தமிழ் என்ற தொடர் கூட நமக்கு விளங்குகிறது. வளரவேண்டிய தமிழ் இது, கிழட்டுத் தமிழல்ல மலட்டுத் தமிழல்ல, வளர வேண்டிய வளம் பெற்றிருக்க வேண்டிய தமிழ் வளர்ச்சிக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிற தமிழ் கன்னித் தமிழ்…

முனைவர் பொன் கோதண்டராமன்

Back to Top