Search

Sold out

தமிழக அடிமைகள் கூலியாட்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களின் இவாழ்வியல் சூழல்/ Thamizhaga Adimaigal, Kooliaatkal, Oppantha Thozhilaalargalin Vaazhviyal Soozhal

200.00

ISBN : 9788123441771
Author :s. jeyaseela stephen
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A4530

Compare

Out of stock

இந்த நூல் தமிழ்ச் சமூகமானது இடைக்காலத்திலிருந்து காலனிய ஆட்சிக்கு
மாறுவதைப்பற்றியும், காலனியப் பேரரசை விரிவடையச் செய்ததுபற்றியும் தெளிவாக எடுத்துக்கூறுகிறது. தமிழகத்தில் டச்சுக் கிழக்கிந்திய நிறுவன அடிமைகளின் சமூக வாழ்வியல், ஜகார்த்தா, கொழும்பு, பாண்டன் மற்றும் மெலாகாவிற்கு கப்பல்களில் ஏற்றி அனுப்பியது மற்றும் இடப்பெயர்ச்சி, சென்னை மற்றும் புதுச்சேரியில் வீட்டுவேலை செய்தவர்கள், பல்லக்குத் தூக்கியவர்கள், குடைபிடித்தவர்கள், கூலியாட்கள், காவலாளிகளின் சேவை, தூது அஞ்சல்காரர்கள் பணி, கட்டிட வேலை செய்தவர்கள், சமையல்காரர், வண்ணார், கப்பலோட்டி, கப்பல் சரக்குப்பொறுப்பாளர் மற்றும் இதர கடல்சார் பணியாளர்கள், உழைப்போர் வர்க்கம் பங்கு எவ்வாறு பயன்படுத்தப்பட்டு, காலனியஅரசு உருவானதுபற்றி மிக விரிவாக ஆய்வு செய்கிறது. தொழிலாளர்களின் ஏழ்மை, நடைமுறையில் இருந்த தொழிலாளர்கள் ஒப்பந்தமுறை, வலங்கை, இடங்கை சாதித் தலைவர்களின் பங்கு, துணை ஒப்பந்தக்காரர் மூலம் வழங்கப்பட்ட கூலிபற்றியும், இங்கிலாந்தில் இருந்த சட்டத்தின்படி ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனம் சென்னையில் 1811ஆம் ஆண்டு தொழிலாளர்கள் விதிமுறைகளை அறிமுகப்படுத்தி, காலனிய வளர்ச்சி மற்றும் ஆட்சிக்கு எவ்வாறு வித்திட்டது என விளக்குகிறது.

முன் அட்டைப்படம்: உலக மிஷினரி, ஆலோசனைக்குழு ஆவணக்காப்பகம், லண்டன்.

Back to Top