Search

சிங்காரவேலரின் சிந்தனையும் தொண்டும் / Singaravelarin Chindhanaiyum Thondum

190.00

ISBN : 9788123415512
Author : P. Veeramani
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2009
Code no : A1948
Pages : 372

Qty
Compare

In Stock

சிங்காரவேலரின்
சிந்தனையும் தொண்டும்

“இப்பொழுது எனக்கு வயது 84. எனினும், தொழிலாளி வர்க்கத்திற்கு
என் கடமையைச் செய்ய நான் இங்கு வந்துள்ளேன். உங்கள் இடையே இருந்து நீங்களும், உங்களுடன் ஓருயிராக, உங்களில் ஒருவனாக இருப்பதைக் காட்டிலும் மற்றெதை நாள் விரும்ப முடியும்.

(1945இல் அச்சத் தொழிலாளர் சங்க மாநாட்டில் சிங்காரவேலர் ஆற்றிய உரை)

“பொதுவுடைமை, பகுத்தறிவு சம்பந்தமாக அவரைப் போன்று அறிந்தவர்கள் அப்போது இல்லை என்றே கூறலாம். அவர் எப்போதும், படித்துக்கொண்டே இருப்பார். அவர் வீடே புத்தகச் சாலையாகக் காட்சியளித்தது. கடினமான பிரச்சினைகளைக் குறித்து எல்லாம் எழுதுவார். அவர் தைரியமான நாத்திகர். காங்கிரசில் இருந்துகொண்டே சட்ட சபையில் (நகரசபையில் கடவுளின் பெயரால் பிரமாணம் எடுக்கக்கூடாதென்று தீர்மானம் கொண்டு வந்தார். எதையும் ஆராய்ச்சி செய்யும் பண்பும், துணிச்சலும், தைரியமுமுடைய அவரைப் போன்ற ஆராய்ச்சியாளர்கள் நிறைய விஷயம் உணர்ந்து வாதிப்பவர்கள் அவருக்குப் பிறகு தோன்றவில்லை.
உண்மையான உழைப்பாளர்களாக, தொண்டர்களாக ஒரு சிலர்தான் நாட்டில் தோன்றமுடியும். அந்த அளவில் தோழர் சிங்காரவேலு அவர்களை நாம் பாராட்டுகிறோம்.

(பொன்மலை ரயில்வே தொழிலாளர் மாநாட்டில் 25.9.1952இல் ம. சிங்காரவேலரின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தபோது தந்தை பெரியார் ஆற்றிய உரை)

Back to Top