Search

இலக்கிய வரைவுகள் / Ilakkiya Varaivugal

125.00

ISBN : 9789385982231
Author : Dr. M. Manivel
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : T441

Qty
Compare

In Stock

சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான பல்வேறு காலப் பகுதிகளில்
படைப்பாக்கம் செய்யப்பெற்ற இலக்கியங்கள், இலக்கண நூல்கள் பலவற்றினின்றும் கற்றுத் தெரிந்து, தெளிந்தது என யான் உணர்ந்த கருத்துக்களைக் கட்டுரைகளாக்கி, எனக்கு எழுதத் தெரிந்த தமிழ் மொழிநடையில் இந்நூலில் வழங்கியிருக்கிறேன்.
பலகாலம் பன்னூல்களைக் கற்றுத் தெளிந்த அறிவுசான்ற தமிழ்ப் பெருமக்கள்
இந்நூலின் செய்திகளையும் மனம்கொள்ள வேண்டுவேன்.

இந்நூற் கட்டுரைகளைப் படிப்போர்க்கு இவை எவ்வகையிலேனும் பயனுடையதாக அமையும் என யான் அறிவேன். பன்னூல்களைக் கற்றுச் சேர்த்த அறிவுடையவர்கள்
தாமே நாம். இந்நூலைக் கற்போர் பலரும் எழுதிய அறிவு நூல்களையும், அறிவு நலம் சேர்க்கும் கட்டுரைகளையும் கடந்த காலங்களில் யான் கற்றிருக்கக் கூடும்: எதிர்வரும் காலங்களில் கற்கவும் கூடும். அவ்வகையில் அனைவருக்கும் யான் நன்றியுடையவனாக இருப்பேன்.

-மு.மணிவேல்

Back to Top