Search

-10%

இரவுகளின் நிழற்படம்

63.00

Author : Yuma Vasuki
Category : Poem
ISBN : 8123410948
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2006
Code no : A1521
pages: 159

Qty
Compare

In Stock

சவால்
மழையில் நனைந்து நடுங்கி
என் வீட்டுக் கதவை இரவில் தட்டிய வெற்றி தலை மறைத்துச் செல்ல
ஒரு குடை கேட்டு இறைஞ்சி நின்றபோது நான் என் கேடயத்தைக் கொடுத்தேன் வேறெங்கும் செல்லப் பிரியப்படாமல் வாசலருகிலேயே கிடக்கிறது அதுமுதல் கானக வழியிடையில் காலில் முள் தைத்து துடித்துக் கிடந்தான் கடவுள்
ஊன்றிக் கொண்டு போகச் சொல்லி
என் உடைவாளைக் கொடுத்தேன்
அவள் இலக்கை மாற்றிக் கொண்டு
எனக்குப் பின்னேதான் வந்து கொண்டிருக்கிறான் நதியில் நீந்திய தேவதையின் ஆடைகளை
வெள்ளம் உருவிப்போன பிள் – பல காலம் பழகிய சிலந்திகளால் மானம் மறைத்து மலைக்குகையில் கிடந்தாள்
என் உடுப்புகளை அவிழ்த்துக் கொடுத்த பிறகு தலைக்குயரே மிதக்கிறாள் – நான்
செல்ல வேண்டிய பாதையை தெரிவு செய்ய வலிமையின் குழந்தைகள் செய்த
விளையாட்டுப் படகை
வெள்ளோட்டம் பார்க்கக் கொஞ்சம்
ரத்தம் கொடுத்தேன்
என் மூச்சில் புகுந்து உடலில் தங்கின குழந்தைகள்
நான் வாளற்றவன் காப்பாற்றவன்
உடையும் உதிரமும் அற்றவன் – விதியே
உன்னைப் புதைக்கவேண்டிய
இடத்தைத் தெரிவு செய்து
சமருக்குத் தயாராகி வா.

Back to Top