New Releases - ncbhpublisher.in https://www.ncbhpublisher.in books publisher and online selling Tue, 30 Apr 2024 05:07:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 கிறித்தவக் காப்பியங்கள் https://www.ncbhpublisher.in/product/christhava-kappiyangal/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=christhava-kappiyangal Sat, 27 Apr 2024 07:30:42 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=30538 Book Title : கிறித்தவக் காப்பியங்கள் (Christhava kappiyangal)
Edition : 1
ISBN : 9788123446110
Author : Dr.Y. Gnana Chandra Johnson
Binding : Paper Back
Weight : 200gm
Language : Tamil
Publishing Year : 2024
Pages : 600
Code no : A4987

The post கிறித்தவக் காப்பியங்கள் first appeared on ncbhpublisher.in.

]]>
கிறித்தவக் காப்பியங்கள்
சென்னைக் கிறித்தவக் கல்லூரித் தமிழ்த் துறையின் மேனாள் தலைவர்; நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றவர்; நூலாசிரியர், பதிப்பாசிரியர், உரையாசிரியர் என்னும் பன்முகத் தன்மை உடையவர். இவரது நூல்களுள் கிறித்தவக் கீர்த்தனைக் கவிஞர்கள், கிறித்தவச் சிற்றிலக்கியத் திரட்டு. எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை, வேதநாயக சாஸ்திரியார், கிறித்தவத் தமிழ்க் கீர்த்தனைகள் – ஓர் ஆய்வுப் பதிப்பு, அருட்பணியாளர் இராபர்ட் கால்டுவெல், ஜெர்மானிய இறைத் தொண்டர் ரிங்கல்தௌபே என்பன குறிப்பிடத்தக்கவை.
இந்நூல் 48 கிறித்தவத் தமிழ்க் காப்பியங்களை அறிமுகப்படுத்துகிறது. தமிழுக்கும் கிறித்தவத்திற்கும் எவ்வளவு அழகான, ஆழமான, அழுத்தமான பரந்துபட்ட உறவாடல் இருந்துள்ளது என்பதை இக்காப்பியங்கள் பிரதிபலிக்கின்றன. இவை இறைநெறிக் காப்பியங் களாக மலர்ந்து, கிறித்தவ வீரத்தையும், கிறித்தவ வாழ்வியல் விழுமியங்களையும் தம் காப்பியப் பின்னணியில் அமைத்து, உயர் தனிப் படைப்புகளாக ஏற்றம் பெற்றுள்ளன. காப்பியங்களாகவும், கதைபொதிப் பாடல்களாகவும், தொடர்நிலைச் செய்யுட்களாகவும், வாழ்க்கை வரலாற்றுக் காப்பியங்களாகவும், காப்பியத் துணுக்கு களாகவும், மொழிபெயர்ப்புக் காப்பியங்களாகவும் கதை சொல்லும் போக்கில் இக்காப்பியங்கள் அமைந்துள்ளன.

The post கிறித்தவக் காப்பியங்கள் first appeared on ncbhpublisher.in.

]]>
நலவாழ்வு நம் கையில் https://www.ncbhpublisher.in/product/nalavaazhvu-nam-kaiyil/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=nalavaazhvu-nam-kaiyil Sat, 20 Apr 2024 12:03:51 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=30459 Book Title : நலவாழ்வு நம் கையில்  (Nalavaazhvu Nam Kaiyil)
Category : Health / Medicine
Edition : 1
ISBN : 9788123445984
Author : Dr.S. Narenthiran
Binding : Paper Back
Weight : 100gm
Publishing Year : 2024
Pages : 212
Language : Tamil
Code no : A4977

The post நலவாழ்வு நம் கையில் first appeared on ncbhpublisher.in.

]]>
நலவாழ்வு நம் கையில்

இவரது மருத்துவ வாழ்க்கையிலேயே இவ்வளவு பெரிய ‘பிரிஸ்கிரிப்ஷனை’ எழுதியிருப்பதை மிகப்பெரிய சாதனையாய் முன் மொழிகிறேன்.
இது. வீட்டுக்கு வீடு இருக்க வேண்டிய புத்தகம் முதலுதவிப் பெட்டிபோல, மிகவும் முக்கியம்.

                                                                                                                                                                  வைரமுத்து.

The post நலவாழ்வு நம் கையில் first appeared on ncbhpublisher.in.

]]>
உச்சி வெயில் https://www.ncbhpublisher.in/product/ucchi-veyil/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ucchi-veyil Tue, 09 Apr 2024 06:43:48 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=29974 Book Title : உச்சி வெயில் (Ucchi veyil)
Edition : 1
Category : Articles
ISBN : 9788123446202
Author : S.V. Rajadurai
Weight : 100gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2024
Pages : 192
Code no : A4998

The post உச்சி வெயில் first appeared on ncbhpublisher.in.

]]>
உச்சி வெயில்

எஸ்.வி.ராஜதுரை எழுதிய எந்த நூலாக இருந்தாலும் அதைக் கற்றல் நோக்கோடு அணுகுவது என் வழக்கம். அவசியமான தகவல்கள். உரிய கோட்பாட்டு விளக்கம், அதைப் பொருத்துதல். சுயமான பார்வை என அனைத்தும் சேர்ந்து ஒரு பெட்டகம் போன்ற தன்மையுடன் அவரது ஒவ்வொரு கட்டுரையும் அமைந்திருக்கும். சிறுகட்டுரை என்றாலும் அப்படித்தான். உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக அறிவுத்தளத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அவர் ஆளுமை வியப்பளிக்கக் கூடியது.

பெருமாள் முருகன் (17.01.2024 முகநூல் பதிவிலிருந்து)

The post உச்சி வெயில் first appeared on ncbhpublisher.in.

]]>
நடப்பு விவகாரங்களைப் பற்றி எழுதும் பத்திரிகையாளனின் குறிப்புகள் https://www.ncbhpublisher.in/product/nadappu-vivagarangalai-pattri-ezhuthum-pathirikaiyaalanin-kurippugal/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=nadappu-vivagarangalai-pattri-ezhuthum-pathirikaiyaalanin-kurippugal Thu, 28 Mar 2024 06:07:24 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=29782 Book Title : நடப்பு விவகாரங்களைப் பற்றி எழுதும் பத்திரிகையாளனின் குறிப்புகள் (Nadappu vivagarangalai pattri ezhuthum pathirikaiyaalanin kurippugal)
Edition : 1
Category : Sirunool Varisai
ISBN : 9788123446134
Author : V.I. Lenin
Translator : S.V. Rajadurai
Binding : Paper Back
Weight : 100gm
Language : Tamil
Publishing Year : 2024
Pages : 20
Code : A4989

The post நடப்பு விவகாரங்களைப் பற்றி எழுதும் பத்திரிகையாளனின் குறிப்புகள் first appeared on ncbhpublisher.in.

]]>
நடப்பு விவகாரங்களைப் பற்றி எழுதும் பத்திரிகையாளனின் குறிப்புகள்

2024ஆம் ஆண்டு லெனினின் நூறாண்டு நினைவு ஆண்டாக உலகம் முழுவதிலுமுள்ள கம்யூனிஸ்டுகளால் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த கம்யூனிஸ்டுகளும் அவர்களது ஆதரவாளர்களும் லெனின் படைப்புகளில் மிக முக்கியமான. இன்றும் பொருத்தப்பாடுடைய சில நூல்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டு அவரது கருத்துகளை இளம் தலைமுறையைச் சேர்ந்த தோழர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற விருப்பத்தின் ஒரு பகுதியாக 1922இல் லெனின் எழுதிய, மூன்று பகுதிகளைக் கொண்ட “நடப்பு விவகாரங்களைப் பற்றி எழுதும் பத்திரிகையாளனின் குறிப்புகள் என்ற கட்டுரையின் தமிழாக்கம் வெளிவருகிறது.

The post நடப்பு விவகாரங்களைப் பற்றி எழுதும் பத்திரிகையாளனின் குறிப்புகள் first appeared on ncbhpublisher.in.

]]>
இறை நம்பிக்கை இழந்தவள் https://www.ncbhpublisher.in/product/irai-nambikkai-izhanthaval/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=irai-nambikkai-izhanthaval Sat, 24 Feb 2024 05:36:28 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=28850 Book Title : இறை நம்பிக்கை இழந்தவள் (Irai Nambikkai izhanthaval)
Edition : 1
Category : Translation
ISBN : 9788123445700
Author : Ayaan Hirsi Ali
Translator : M.N. Pugazhenthi
Binding : Paper Back
Weight : 200.00gm
Publishing Year : 2023
Language : Tamil
Pages : 548
Code no : A4950

The post இறை நம்பிக்கை இழந்தவள் first appeared on ncbhpublisher.in.

]]>
இறை நம்பிக்கை இழந்தவள்

இந்நூல் ஒரு சோமாலியப் பெண்ணின் வாழ்வியல் அனுபவம் மட்டுமே. கேள்வி எழுப்புவதே பாவம் எனக் கற்பிக்கப்பட்ட அந்தப் பெண் , கேள்விகள் வழியே தன் மீது கட்டப்பட்ட பிம்பங்களை உடைக்கத் தயாராகின்றார். அவர் கலகக்காரியுமல்ல. போராளியுமல்ல. அவர் ஒரு சாதாரணப் பெண். மனித உயிர்கள் சுவாசக் காற்றை சுவாசிக்க விரும்புவது போல அவரும் சுவாசிக்க விரும்பினார். அதன் முகம் தெரிய, கால்கள் தெரிய. பிற பெண்களைப் போல நடக்க விரும்பினார். பேச விரும்பினார். அவரை இறை நம்பிக்கையற்றவர் எனப் பிறர் சொன்னதை அலட்சியம் செய்தார். அவருக்கும் இறைக்கும் இடையே பிறர் நிற்பதை அவர் விரும்பவில்லை என்பது மட்டும் உண்மை.

ச. பாலமுருகன் எழுத்தாளர்

 

The post இறை நம்பிக்கை இழந்தவள் first appeared on ncbhpublisher.in.

]]>
கிடங்கு https://www.ncbhpublisher.in/product/kidangu/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=kidangu Tue, 06 Feb 2024 06:34:55 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=28324 Book Title : கிடங்கு (kidangu)
Edition : 1
Category : Novel
ISBN : 9788123445908
Author : Andal Priyadarshini
Weight : 150.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2023
Pages : 96
Code no : A4970

The post கிடங்கு first appeared on ncbhpublisher.in.

]]>
கிடங்கு

பிணக்கூராய்வுத் தொழிலாளர்களின் அக. புற வாழ்வியலை விசாலமாகப் பேசுகிறது இந்நாவல். பார்க்கவே அருவருப்பாகத் தோன்றும் உருச் சிதைந்த பிணங்களை சகஜமான மனநிலையில் உடற்கூராய்வு செய்யும் தொழிலாளர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சிக்கல்கள், அவலங்கள். பாடுகளை இயல்போட்டமாகக் கூறிச் செல்லும் இந்நாவல் புதியதோர் வாசக அனுபவத்தைத் தருவதாக அமைந்துள்ளது. தினந்தோறும் பிணங்களோடு உறவாடும் மனிதர்களின் எளிய வாழ்க்கை உருவாக்கித் தரும் சித்திரங்கள் கனமானவை என்பதோடு சஞ்சலத்தையும் தருபவை என்றுரைக்கிறது நாவல்.

The post கிடங்கு first appeared on ncbhpublisher.in.

]]>
மதுரை மாநகர வெளியில் அறிந்ததும் அறியாததும் https://www.ncbhpublisher.in/product/madurai-maanagara-veliyil-arinthathum-ariyathathum/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=madurai-maanagara-veliyil-arinthathum-ariyathathum Thu, 01 Feb 2024 05:37:48 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=28250 Book Title : மதுரை மாநகர வெளியில் அறிந்ததும் அறியாததும் (Madurai Maanagara Veliyil Arinthathum Ariyathathum)
Edition : 1
Category : Articles
ISBN : 9788123445892
Author : N. Murugesapandiyan
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2024
Pages : 184
Code no : A4969

The post மதுரை மாநகர வெளியில் அறிந்ததும் அறியாததும் first appeared on ncbhpublisher.in.

]]>
மதுரை மாநகர வெளியில் அறிந்ததும் அறியாததும்

மதுரை நகரை முன்வைத்து ஏற்கெனவே வந்துள்ள புத்தகங்களில் இருந்து மாறுபட்ட நிலையில் சமகாலத்தில் வாழ்கின்ற மதுரைக்காரர்களை முன்னிறுத்தி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கடந்த அறுபது ஆண்டுகளில் நூலாசிரியர் எதிர்கொண்ட மதுரை நகரம் பற்றிய சுவையான பல தகவல்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. எதிர்காலத் தலைமுறையினருக்கு மதுரை நகரம் இப்படியெல்லாம் இருந்தது என்று அறிந்திட உதவுகிற இந்தப் புத்தகம் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் வரலாற்றுப் பதிவாக மாறுவது ஒருவகையில் விநோதம்தான்.

The post மதுரை மாநகர வெளியில் அறிந்ததும் அறியாததும் first appeared on ncbhpublisher.in.

]]>
தொல்காப்பியச் செய்யுள் உறுப்புகள் மீள்வாசிப்பு https://www.ncbhpublisher.in/product/tholkappiya-cheyyul-uruppugal-meelvaasippu/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=tholkappiya-cheyyul-uruppugal-meelvaasippu Wed, 31 Jan 2024 11:43:03 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=28241 Book Title : தொல்காப்பியச் செய்யுள் உறுப்புகள் மீள்வாசிப்பு (Tholkappiya Cheyyul Uruppugal Meelvaasippu)
Edition : 1
Category : Research Texts
ISBN : 9788123445724
Author : P. Mathaiyan
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2023
Pages : 364
Code no : A4952

The post தொல்காப்பியச் செய்யுள் உறுப்புகள் மீள்வாசிப்பு first appeared on ncbhpublisher.in.

]]>
தொல்காப்பியச் செய்யுள் உறுப்புகள் மீள்வாசிப்பு

முன்னம், துறைவகை, களம், காலம், நோக்கு, பொருள்வகை, யாப்பு எனும் எழுவகை உறுப்புகளும் பற்றிய விரிவான ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. ஒவ்வொரு செய்யுள் உறுப்பும் பற்றிய விரிவான முன்னாய்வுத் தகவல்களோடும், அவை குறித்த மதிப்பீடுகளோடும் மேற்கோள் பாடல்களுடனான விளக்கங்களோடும் மிகப் பரந்துபட்ட நிலையில் விரிவாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஆய்வுநூல் எதிர்காலத் தொல்காப்பியக் கவிதையியல் ஆய்வுகளுக்குத் தரவாக நல்ல வழிகாட்டியாக அமையும்.

The post தொல்காப்பியச் செய்யுள் உறுப்புகள் மீள்வாசிப்பு first appeared on ncbhpublisher.in.

]]>
சு.தமிழ்ச்செல்வி சிறுகதைகள் https://www.ncbhpublisher.in/product/su-tamilselvi-sirukathaigal/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=su-tamilselvi-sirukathaigal Mon, 29 Jan 2024 10:08:03 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=28198 Book Title : சு.தமிழ்ச்செல்வி சிறுகதைகள் (Su.Tamilselvi sirukathaigal)
Edition : 1
Category : Short stories
ISBN : 9788123445694
Author : S. Tamilselvi
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2023
Pages : 148
Code no : A4945

The post சு.தமிழ்ச்செல்வி சிறுகதைகள் first appeared on ncbhpublisher.in.

]]>
சு.தமிழ்ச்செல்வி சிறுகதைகள்

விவசாயிகள், மீனவர்கள். இடையர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என உழைக்கும் அடித்தட்டு மக்களின் வாழ்வியலைத் தன் படைப்புவெளியில் தொடர்ந்து பதிவு செய்துவரும் எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வியின் பதிமூன்று சிறுகதைகளடங்கிய தொகுப்பு. இன்றைய சமூகம் கொஞ்சங்கொஞ்சமாக இழந்துகொண்டிருக்கும் அசலான கிராமங்களும் எளிய மனிதர்களும் இக்கதைகளில் பக்கம்பக்கமாக உலாவுகின்றனர். எதையும் சகித்துக்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் எதிர்கொள்ளவும் இக்கதைமாந்தர்கள் ஒப்புக்கொடுக்கிறார்கள். இக்கதைகளுக்கூடே வரும் நாட்டார் வழக்காற்றியல் கதைகளும் ஆவணப்படுத்தப்படவேண்டிய தேவையுடையவை.

The post சு.தமிழ்ச்செல்வி சிறுகதைகள் first appeared on ncbhpublisher.in.

]]>
அகலிகை தொன்மமும் புனைவும் https://www.ncbhpublisher.in/product/agaligai-thonmamum-punaivum/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=agaligai-thonmamum-punaivum Mon, 29 Jan 2024 09:02:26 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=28190 Book Title : அகலிகை தொன்மமும் புனைவும் (Agaligai Thonmamum Punaivum)
Edition : 1
Category : Articles
ISBN : 9788123445885
Author : M. Seemanambalam
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2024
Pages : 152
Code no : A4968

The post அகலிகை தொன்மமும் புனைவும் first appeared on ncbhpublisher.in.

]]>
அகலிகை தொன்மமும் புனைவும்

அன்போ அதிகாரமோ. வரமோ சாபமோ, ஆண் செலுத்துவதும் பெண் அதனை ஏற்று மௌனிப்பதுமான சமநிலையின்மை உடைமைச் சமூக ஏமாற்றின் தொடர்ச்சி

எல்லாச் சொல்லுக்கும் பொருள் இருப்பது போல், அவற்றிற்கோர் அரசியலும் இருக்கிறது. அது ஆண்களின், அதிகாரத்தின் அரசியல், கற்பு எனும் பொதுச்சொல் பெண்ணின் ஒழுக்கத்தைக் குறிப்பதற்கான உடல் அரசியலாகும்போது, பத்தினியென்று உயர்தகைமையிலும், பரத்தையென்று இழிதகைமையிலும் பேசுபொருளாகிறது.அகலிகையெனும் உடைமை. ஆண்களின் மனத்தில், எழுத்தெனும் ஊடகத்தில் அவர்கள் விரும்பியபோது கனியாகவும். விரும்பாதபோது கல்லாகவும் ஆகிறாள். இயற்கையுணர்வான காமம்.

பண்பாட்டுப் புனைவுணர்வான கற்பால். தண்டனைக்குள்ளாகும் அகலிகைத் தொன்மம் குறித்துப் பேசும் படைப்புகளைப் பற்றிப் பேசுகிறது இந்நூல். மு.சீமானம்பலம், சென்னையிலுள்ள அரசு கல்லூரி ஒன்றில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். தமிழ்ப் புதினங்களில் இருத்தலியல் (2006). அகலிகை: கதைகள்-கவிதைகள்-நாடகங்கள் (2024) ஆகியன இவரது பிற நூல்கள்.

The post அகலிகை தொன்மமும் புனைவும் first appeared on ncbhpublisher.in.

]]>