Search

-22%

மார்க்ஸ் – அம்பேத்கர் தொடரும் உரையாடல் / Marx – Ambedkar Thodarum Uraiyadal

250.00

Category : Marxism
ISBN : 9788123441061
Author : D. Raja
Weight : 100.00 gm
Marx – Ambedkar Thodarum Uraiyadal
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2021
Code no : A4459

Qty
Compare

In Stock

இயற்கை விதிபோல, மனிதர்களால் தடுத்து நிறுத்த முடியாத அதிகாரத்துடன் இந்தியாவில் தொழிற்படுகிறது சாதி என்கிறார் மார்க்ஸ். இதுதான் இங்கு முதலாளியத்துக்கு ஆதரவான நிலை. சமூகப் புரட்சி இன்றி, சோஷலிசப் புரட்சி நிறைவேறாது என்ற நிலைகொண்ட இந்தியாவில் ஒன்றின் வெற்றியால், | இன்னொன்று தொய்ந்து விடா வண்ணம், இரண்டையும் ஒன்றுக்கொன்று நெகிழச் | செய்து சமூகம் இரண்டிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்கான கோட்பாட்டுருவாக்கத்தில் முக்கிய கவனம் பெறுகிறது| “மார்க்ஸ் – அம்பேத்கர் தொடரும் உரையாடல்” என்னும் இந்நூல்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் டி.ராஜா புரட்சிகர அரசியலாளர்; அடையாள அரசியலிலும், பண்பாட்டு அரசியலிலும் |தீவிரமாகப் பயணித்து வரும் மார்க்சியக் கோட்பாட்டாளர் பேராசிரியர் ந.முத்துமோகன். இவ்விருவரும் இணைந்து எழுதியுள்ள Marx and Ambedkar – | Continuing the Dialogue என்னும் இந்நூல் பேரா.ரகு அந்தோணி அவர்களின் | இயல்பான மொழிபெயர்ப்பில் தமிழுக்கு வருகிறது. மார்க்சியக் கருத்தியலுக்கும் அம்பேத்கரியக் கருத்தியலுக்கும் இடையேயுள்ள ஒற்றுமைகளையும், அவற்றின் பொருத்தப்பாடுகளையும் கருத்தில் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம், இவ்விரண்டு சிந்தனைகளும் தோன்றிய வரலாற்றுச் சூழல்களை ஆய்வு செய்கிறது; சமயம் மற்றும் சாதியின் சமூக அந்தஸ்தையும், பங்களிப்பையும் கணக்கில் கொள்கிறது. வர்க்க – சாதி உறவுகளை விவாதிக்கும்போது, பண்டைச் சூழல்களுக்கும், இன்றையச் சூழல்களுக்கும் | இடையேயுள்ள வேறுபாடுகளையும், இன்று பேசப்படும் அடையாள அரசியலில் பொதிந்திருக்கும் வர்க்க, சாதி நலன்களையும் ஆய்வுக்குட்படுத்துகிறது. இந்த நோக்கத்தில்தான், மார்க்சியத்திற்கும், அம்பேத்கரியத்திற்கும் இடையே ஓர் உரையாடல் அவசியமென்பதை இந்த நூல் கூர்மையாக வலியுறுத்துகிறது.

Back to Top