Search

காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு / Karl Marx Vazhkai Varalaru

850.00

ISBN : 9788123419961
Author : Editorial Board
Weight : 100.00 gm
Karl Marx Vazhkai Varalaru
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 1978
Code no :A2366

Qty
Compare

In Stock

எங்கள் வாழ்க்கையின் ஒரே ஒரு நாள் நிகழ்ச்சியினை வர்ணிக்க இவ்வளவு நீளமாக இத்தனை சொற்களைப் போட்டு எழுதுவது குறித்து, அருமை நண்பரே, தயவு செய்து மன்னிப்பீராக! இது நாணமற்றது என்று நான் அறிவேன். ஆனால் இன்று மாலை என் இதயம் வெடித்துக் கொண்டிருக்கிறது; என் இதயத்திலுள்ள துயர பாரத்தை எனது மிகப் பழைய, உண்மையான, சிறந்த நண்பரிடம் ஒரு தடவையாவது கொட்டிவிட வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தச் சில்லரைக் கவலைகள் என்னைப் பணிய வைத்துவிட்டன என்று நினைத்து விடாதீர்கள். நமது போராட்டம் தனிமைப்பட்ட ஒன்றல்ல என்பதை நன்றாக அறிவேன். குறிப்பாக, என்னைப் பொருத்தவரை, நான் மகிழ்ச்சியுள்ள, சலுகைகள் பெற்ற அதிர்ஷ்டக்காரி என்றே என்னைக் கருதுகிறேன். காரணம், எனது வாழ்க்கையின் ஆதரவான என் அருமைக் கணவர் இன்றும் என் அருகில் இருக்கிறார். அவருக்குத் தேவைப்படும் உதவியின் அளவு சிறிதாக இருந்தபோதிலும், இந்தச் சில்லரை விஷயங் களுக்காக அவர் இவ்வளவு தூரம் வருந்தவேண்டியிருக்கிறதே என்பதும் எத்தனையோ பேருக்கு விருப்பத்துடன் உதவிபுரிந்த அவர் இன்று இவ்வாறு உதவியற்ற நிலையில் இருக்கிறாரே என்பதும்தான் எனது உள்ளத்தைச் சித்திரவதை செய்கின்றன.”
-ஜென்னி மார்க்ஸ்

மார்க்சின் வாழ்க்கை வரலாறு பல வகைகளில் நமக்கு முக்கியமாக உள்ளது. அது ஒரு மிகப் பெரிய புரட்சிக்காரரின் வாழ்க்கை. அது ஒரு மிகப்பெரிய சிந்தனையாளரின் வாழ்க்கை. மார்க்சியம் என்ற அற்புதமான ஒரு சிந்தனை அவரது வாழ்க்கை முழுவதிலும் ஒரு தொடர் நிகழ்வாக உருவாகிக்கொண்டிருந்தது. அது எப்போதுமே ஒரு முடிந்த சூத்திரமாக ஆகிவிடவில்லை. சமூக அரசியல் அசைவுகளில் தேக்கங்கள் ஏற்பட்டபோதெல்லாம் மார்க்ஸ் மேலும் மேலும் சமூகவரலாற்றின் ஆழங்களையும் பரப்புகளையும் அகழ்ந்தெடுத்துக்கொண்டே இருந்தார்.
மார்க்சின் அரசியல் வாழ்க்கை சந்தித்த பலவகை ஏற்ற இறக்கங்களையும் ஒவ்வொரு அரசியல் சந்தர்ப்பத்தில் மார்க்சின் எதிர்பார்ப்புகளையும் அவற்றின் வெற்றி அல்லது தோல்விகளையும் விரிவாகச் சித்தரிப்பனவாக இந்நூலின் இயல்கள் அமைந்துள்ளன.
– ந.முத்துமோகன்

Back to Top