அறிவின் தாத்பர்யங்களை அதன் எல்லாப் பக்கங்களிலிருந்தும் நின்று நிதானமாக உரைக்கும் அறிவுத்தடம் இந்நூல். ஒரு நிகழ்வை எப்படிப் பார்க்கிறோம், எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பதுதான் அறிவின் அடையாளமாகத் திகழ்கிறது. நம் முன் நிற்கிற ஒரு பிரச்சினையை எவ்வளவு விரைவில் புரிந்துகொண்டு அதற்கான தீர்வைப் பரிந்துரைக்கிறோம் என்பதுதான் நம் அறிவின் அடர்த்தி என்பதை விரிவாக விளக்கும் நூல்.